உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கஞ்சா சாக்லேட் விற்பனை பெண் உட்பட மூவர் கைது

கஞ்சா சாக்லேட் விற்பனை பெண் உட்பட மூவர் கைது

சென்னை, புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில், எழும்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற பெண் உட்பட மூவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.சந்தேகமடைந்த போலீசார், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 41 கஞ்சா சாக்லேட் சிக்கியது. விசாரணையில், புரசைவாக்கத்தைச் சேர்ந்த உஷா, 42, கோகுலகிருஷ்ணன், 19, பாலாஜி, 20, என்பது தெரிய வந்தது.நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், 41 கஞ்சா சாக்லேட், 2.950 கிலோ கஞ்சா, மூன்று மொபைல் போன்கள், 60 ஆயிரம் ரூபாய், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட உஷா, பிரபல கஞ்சா வியாபாரி வேல் அழகி என்பவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை