உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாற்றில் சிக்கிய மூன்று பேர் மீட்பு

பாலாற்றில் சிக்கிய மூன்று பேர் மீட்பு

செங்கல்பட்டு : காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா காவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவுதம்,25, அஜித்,21, ஆனந்தி, 30. இவர்கள் மூவரும் நேற்று முன்தினம், பாலாற்று பகுதியில் மாடு மேய்க்க சென்றனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியை ஒட்டியுள்ள பாலாற்றில், மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்ததால், மூவரும் நடுவிலுள்ள கரையில் தத்தளித்தனர்.இது குறித்து அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், 'ரப்பர்' படகில் சென்று, மூவரையும் பத்திரமாக மீட்டனர். தண்ணீரில் தத்தளித்த ஒரு கன்றுக்குட்டியையும் உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை