புலிகள் தினம் மாணவர்களுக்கு ஓவிய போட்டி
தாம்பரம்:ஜூலை 29ம் தேதி, சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி, வண்டலுார் உயிரியல் பூங்கா நிர்வாகம், திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில், புலிகள் குறித்த விழிப்புணர்வை நேற்று முன்தினம் நடத்தியது. அப்போது, புலிகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறியும் வகையில், 'ஆன்லைன்' வாயிலாக ஓவியப் போட்டியை அறிவித்தது. இதில், மூன்று - ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, புலிகளின் இயற்கையான வாழ்விடம்; ஆறு - எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, எதிர்கால காடு - புலிகளின் பாதுகாப்பு; ஒன்பதாம் வகுப்பு - பிளஸ் 2 மாணவர்களுக்கு, காடுகளின் பாதுகாப்பு என்ற தலைப்பில், இப்போட்டி நடத்தப்படுகிறது. முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட உள்ளது. ஆக., 5ம் தேதி வரை நடக்கும் இந்த ஆன்லைன் ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவ - மாணவியர், http://aazp.in/drawing-competition-202/ என்ற இணையதளத்தில், தாங்கள் வரைந்த ஓவியங்களை பதிவிடலாம் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.