உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொ.மு.ச., ஆலோசனை கூட்டம்

தொ.மு.ச., ஆலோசனை கூட்டம்

மதுராந்தகம்,:மதுராந்தகத்தில். தி.மு.க.,வின் தொழிற்சங்கமான தமிழ்நாடு நகராட்சிகள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின், மதுராந்தகம் கிளையில், மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம், பிப்., 16ல் நடைபெறுவதை ஒட்டி, நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.இதில், மாநில தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுச் செயலர் ஹரிதாசன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கல்வித் தகுதி இல்லாத வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்க கூடிய அரசு பணி உடனடியாக வழங்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கும், ஒப்பந்த பணியாளர்களுக்கும் சொந்த குடியிருப்பு, ஊதிய உயர்வு வழங்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ