உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செய்யூர் பஜார் பகுதியில் கழிப்பறை பணிகள் துவக்கம்

 செய்யூர் பஜார் பகுதியில் கழிப்பறை பணிகள் துவக்கம்

செய்யூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, செய்யூர் பஜார் பகுதியில் புதிதாக கழிப்பறை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. செய்யூர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. செய்யூர் பஜார் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் தேவராஜபுரம், சால்ட் காலனி, பாளையர்மடம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல, செய்யூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்திவருகின்றனர். இதனால், செய்யூர் பஜார் பகுதிக்கு அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள செய்யூர் பஜார் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பினரும்சிரமப்பட்டனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊரக வளர்ச்சித் துறை சார்பாக ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாயில், அரசு மருத்துவமனை எதிரே கழிப்பறை அமைக்க 'டெண்டர்' விடப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்கி உள்ளன. இதற்காக, கான்கிரீட் துாண்கள் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை