உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை விடுதி, படகு குழாமிற்கு சுற்றுலா துறை விருதுகள் வழங்கல்

மாமல்லை விடுதி, படகு குழாமிற்கு சுற்றுலா துறை விருதுகள் வழங்கல்

மாமல்லபுரம், தமிழக சுற்றுலாத் துறை விருதுகள் 15 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதுகள், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதிகளில், மாமல்லபுரம் கடற்கரை விடுதிக்கு சிறந்த பிரீமியம் ஹோட்டல் விருது, படகு குழாம்களில், முதலியார்குப்பம் மழைத்துளி படகு குழாமிற்கு, சிறந்த படகு குழாம் விருது வழங்கப்பட்டது.மேலும், மாமல்லபுரத்தில் இயங்கும் கால்டன் சமுத்ரா விடுதிக்கு, சிறந்த கடற்கரை விடுதி விருது, எம்.பி.எம்., டிராவல் எக்ஸ்.எஸ்., நிறுவனத்திற்கு, சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளருக்கான வெள்ளி விருது ஆகியவை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி