மேலும் செய்திகள்
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
3 minutes ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
3 minutes ago
செங்கல்பட்டு: தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில், செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற கோரி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலை, அரசு மருத்துவமனை, நீதிமன்றம் எதிரே என, அனைத்து சாலை ஓரங்களிலும் நடைபாதை கடைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்களின் வியாபாரம் பாதிப்பு அடைந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், பேரணியாக சென்று, நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
3 minutes ago
3 minutes ago