உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேர்தல் அலுவலர்களுக்கு செங்கையில் பயிற்சி

தேர்தல் அலுவலர்களுக்கு செங்கையில் பயிற்சி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கான, பயிற்சி வகுப்பு நடந்தது.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லுார் ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை, நிலையான சோதனை படை, வீடியோ குழுக்களை அமைத்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.அதனால், இக்குழுக்களில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமையில், நேற்று முன்தினம் பயிற்சி நடத்தப்பட்டது.இந்த சிறப்பு பயிற்சியில், 180 அலுவலர்கள் பங்கேற்றனர். பயிற்சியின் போது, சுங்கச்சாவடிகள் கண்காணிப்பு, முக்கிய சாலைகள் சந்திப்பு, வாகனத் தணிக்கை உள்ளிட்ட பணிகள் குறித்தும், தேர்தல் நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ