சிக்னலில் நின்ற பைக்குகள் மீது லாரி மோதல்: 2 பேர் பலி
பூந்தமல்லிகாஞ்சிபுரம், வெள்ளேரித்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பானுப்பிரியா, 32. இவரின் மகள் காவியா, 3.இருவரும், உறவினர் மாரி என்பவருடன், ஸ்பிளெண்டர் பைக்கில், செம்பரம்பாக்கத்தில் உள்ள பானுப்பிரியாவின் தாய் வீட்டிற்கு சென்றனர்.இதே போல், ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த அரவிந்த்குமார், 25, என்ற தனியார் ஊழியர், ஸ்பிளெண்டர் பைக்கில், பூந்தமல்லி நோக்கி சென்றார்.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் சிக்னல் அருகே, இரண்டு பைக்குகளும் நின்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது.இதில், பானுப்பிரியா, அரவிந்த்குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். குழந்தை காவியா, காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாரி, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்தவர்கள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ஏழுமலை, 45, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.