மேலும் செய்திகள்
கத்தியை காட்டி வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு
03-Jun-2025
கத்தியை காட்டி வாலிபரிடம் மொபைல் போன் பறிப்பு
03-Jun-2025
திருப்போரூர்:திருப்போரூர் அருகே, ஒரே நாள் நள்ளிரவில் நான்கு பேரிடம் பணம், மொபைல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த வழக்கில், இருவரை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் இம்தியாஸ், 40. இவர், கண்டிகையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.கடந்த 16ம் தேதி இரவு 11:00 மணியளவில் பணி முடிந்து, திருப்போரூர் வழியாக கல்பாக்கம் நோக்கி 'பைக்'கில் சென்றார்.அப்போது, பையனுார் அருகே மர்ம நபர்கள் இருவர் இம்தியாசை மடக்கி, அவரிடம் இருந்து பைக் மற்றும் மொபைல்போனை பறித்துச் சென்றனர்.இதேபோல், சென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 45. இவர், செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலையில் 'பைக்'கில் சென்னைக்கு சென்ற போது, இவரை மர்ம நபர்கள் இருவர் மடக்கி, மொபைல்போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.அதேபோல், திருப்போரூர் ஆறுவழிச் சாலையில், சதீஷ்குமார், 30, என்பவரை மடக்கிய மர்ம நபர்கள் இருவர், அவரிடமிருந்து மொபைல்போன் மற்றும் 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.இதைத்தொடர்ந்து, கேளம்பாக்கம் அருகே படூர் ஆறுவழிச் சாலையில், தர்ஷன், 22, என்பவரை மர்ம நபர்கள் இருவர் மடக்கி பைக், மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.இதுதொடர்பாக, கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். இதில், படூர் பகுதியைச் சேரந்த பிரதீப் குமார், 24, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
03-Jun-2025
03-Jun-2025