உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மெக்கானிக் ஷெட்டில் தீ விபத்து இரண்டு கார்கள் எரிந்து நாசம்

மெக்கானிக் ஷெட்டில் தீ விபத்து இரண்டு கார்கள் எரிந்து நாசம்

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில், பாலாஜி என்பவர் கார்கள் பழுது பார்க்கும் 'மெக்கானிக் ஷெட்' வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, பணிகளை முடித்துவிட்டு, பழுது பார்க்க வந்த கார்களை 'மெக்கானிக் ஷெட்' உள்ளே நிறுத்தி விட்டு சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்று அதிகாலை 1:45 மணிக்கு, 'மெக்கானிக் ஷெட்'டில் இருந்து கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், மறைமலை நகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், இரண்டு கார்கள் தீயில் எரிந்து நாசமாகின.இது தொடர்பான புகாரின்படி, கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இது குறித்து, போலீசார் கூறியதாவது:மெக்கானிக் கடைக்குள் நிறுத்தப்பட்ட்டிருந்த இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்து நாசம் அடைந்தன. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.யாரோ வேண்டாத நபர்கள், தீப்பற்ற வைத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், அங்கு பொருத்தப்பட்டுள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ