தேவாதுாரில் குட்கா விற்பனை சகோதரர்கள் இருவர் கைது
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த தேவாதுார் கிராமத்தில், குட்கா பொருட்களை தனி நபர்கள் சிலர் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருவதாக, சித்தாமூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார், தேவாதுார் பகுதியில் சோதனை செய்தனர்.அப்போது, செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இரும்பு கிடங்கில், செல்வதுரை, 44, மற்றும் அவரது அண்ணன் கண்ணன், 52 ஆகியோர், ஹான்ஸ், கூல் லிப், பான் மசாலா போன்ற, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 400 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.அவர்கள் மீது, வழக்குப் பதிந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின், செல்வதுரை, கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.