உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையை ஆக்கிரமிக்கும் டூ-வீலர்கள் செங்கையில் போக்குவரத்து நெரிசல்

சாலையை ஆக்கிரமிக்கும் டூ-வீலர்கள் செங்கையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், சாலையை ஆக்கிரமிக்கும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம் முதல் செங்கல்பட்டு நீதிமன்றம் வரையுள்ள சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சாலை வழியாக செங்கல்பட்டிலிருந்து தாம்பரம், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், கல்பாக்கம், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பிற வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய பணிக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்த வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு வாகனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !