உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடை சாலை ஆக்கிரமிப்பால் திணறல்

மீண்டும் அமைக்கப்படாத நிழற்குடை சாலை ஆக்கிரமிப்பால் திணறல்

புதுப்பட்டினம், புதுப்பட்டினத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நவீன பயணியர் நிழற்குடைகளை மீண்டும் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.அணுசக்தி துறை கல்பாக்கம், புதுப்பட்டினம் ஊராட்சியுடன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. சென்னை - புதுச்சேரி உள்ளிட்ட தட அரசு பேருந்துகள் புதுப்பட்டினம், பழைய கிழக்கு கடற்கரை சாலையில் நின்று, பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடையின்றி வெயில், மழையில் அவதிப்பட்டனர்.இதையடுத்து, சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு நவீன நிழற்குடைகளை, கடந்த 2013ல் அமைத்தது. கடந்த 2015ல், சாலை மையத்தடுப்புடன் விரிவாக்கப்பட்ட போது, அணுமின் நிலைய நிர்வாகம் நிழற்குடைகளை அகற்றி, அதன் வசமே பாதுகாப்பாக வைத்தது.சாலை விரிவாக்கம் முடிந்து, நிழற்குடைகளை மீண்டும் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால், சாலை பகுதியை ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்கள், இதற்கு இடையூறாக உள்ளதாக கூறப்படுகிறது. பலமுறை முயன்றும், கடந்த 10 ஆண்டுகளாக மீண்டும் பயணியர் நிழற்குடைகளை அமைக்க முடியாமல், இழுபறி நீடிக்கிறது.இதனால், பேருந்து பயணியர் திறந்தவெளியில் அவதிப்படுகின்றனர்.எனவே, வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அந்த இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடை அமைக்கவும், பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ