உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உ.பி., இளைஞரை வெட்டி மொபைல் போன் பறிப்பு

உ.பி., இளைஞரை வெட்டி மொபைல் போன் பறிப்பு

மறைமலைநகர்:உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்திர குமார், 23. சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு மகேந்திரகுமார் வேலை முடிந்து, மெல்ரோசாபுரம் பகுதியில் நடந்து வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் மடக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் மொபைல் போனை பறிக்க முயன்றனர்.மகேந்திரகுமார் தர மறுக்கவே, மர்ம நபர்கள் அவரது இடதுகையில் கத்தியால் வெட்டிவிட்டு,'ஓபோ' மொபைல் போன் மற்றும் 1,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.காயமடைந்த மகேந்திரகுமாரை அங்கிருந்தோர் மீட்டு, பொத்தேரி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !