மேலும் செய்திகள்
குடிநீர் கிணறு சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டம்
09-Mar-2025
மதுராந்தகம்; அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, மொறப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இதில், கருணாகரவிளாகம், சின்னக்கருணாகரவிளாகம், அருந்ததிப்பாளையம், மொறப்பாக்கம் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன.அதில், மொறப்பாக்கம் காலனி சுடுகாடு பகுதிக்கு செல்ல மண் பாதை உள்ளது. அப்பாதையை, ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.அந்த சுடுகாட்டு மண் பாதையை, சர்வேயர் வாயிலாக அளவீடு செய்து, ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.மண் பாதையை, தார் சாலையாக தரம் உயர்த்தி அமைக்க, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, கலெக்டர் மற்றும் மதுராந்தகம் வட்டாட்சியர் உரிய ஆய்வு செய்து, சுடுகாடு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
09-Mar-2025