உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடிகால், சாலை வசதி வேண்டி போராடும் வண்டலுார் மக்கள்

வடிகால், சாலை வசதி வேண்டி போராடும் வண்டலுார் மக்கள்

வண்டலூர்:வண்டலுார், சிங்காரத்தோட்டம், மூகாம்பிகை கோவில் தெருவில், 15 ஆண்டுகளாக சாலை, வடிகால் வசதி வேண்டி, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 4வது வார்டுக்கு உட்பட்ட மூகாம்பிகை கோவில், மசூதி, ஈ.வே.ரா., ஆகிய தெருக்களில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர்.இத்தெருக்களில், கடந்த 15 ஆண்டுகளாக சாலை மற்றும் வடிகால் வசதி இல்லை. இது குறித்து பகுதிவாசிகள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.பகுதிவாசிகள் கூறியதாவது:மூகாம்பிகை கோவில் தெரு நுழைவு பகுதியில், 14 வீடுகளை, தனிநபர் வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால், உரிய வசதி செய்து தராததால், இந்த வீடுகளிருந்து வெளியேறும் கழிவு நீர், தெருவில் வழிந்தோடி, அருகிலுள்ள மசூதி தெருவில், காலி இடத்தில் தேங்கி, கொசு உற்பத்தி மிகுதியாகி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தரும்படி, கடந்த 15 ஆண்டுகளாக, ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, சாலை மற்றும் வடிகால் வசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை