உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேரணி செல்ல முயன்ற வி.சி., கட்சியினர் கைது

பேரணி செல்ல முயன்ற வி.சி., கட்சியினர் கைது

மறைமலைநகர்:அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வி.சி., சார்பில், மறைமலைநகரில் இருந்து பேரணி சென்று, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் போக்குவரத்து பிரச்னை ஏற்படுமென, கூடுவாஞ்சேரி போலீசார் பேரணிக்கு தடை விதித்தனர். இந்நிலையில் நேற்று காலை, தடையை மீறி பேரணி செல்ல முயன்ற மாவட்ட செயலர் தென்னவன் மற்றும் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது அவர்கள் மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் கைது செய்து, அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை