ரூ.95 லட்சத்தில் வெங்கப்பாக்கம் பள்ளிக்கு கட்டடம்
புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் பகுதியில், அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. வெங்கப்பாக்கம், குன்னத்துார், பூந்தண்டலம், நெய்குப்பி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 1,330க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், இப்பள்ளியில் படிக்கின்றனர். பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் பள்ளியாக தொடர்ந்து விளங்கும் நிலையில், பிற பகுதியினர் இங்கு பயில ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால், குறுகிய இடத்தில் இயங்கும் பள்ளியில், போதிய வகுப்பறை கட்டட வசதி இல்லை.கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, நபார்டு திட்டத்தில், 94.24 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறைகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, பூமிபூஜையுடன் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.