உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுப்பேட்டை கிராமத்தில் வடிகால்வாய் அமைக்க கிராமத்தினர் வேண்டுகோள்

புதுப்பேட்டை கிராமத்தில் வடிகால்வாய் அமைக்க கிராமத்தினர் வேண்டுகோள்

சித்தாமூர், புதுப்பேட்டை கிராமத்தில் குடியிருப்பு பகுதி மற்றும் சாலையில் மழைநீர் தேங்குவதால், மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை கிராமத்தில், 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது, வீடுகள் உள்ள பகுதிகள் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் தெருவில், மழைநீர் தேங்குகிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பல நாட்களாக தண்ணீர் தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரித்து, இரவு நேரத்தில் கொசுக்கடியால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதுப்பேட்டை கிராமத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க, மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை