புறாவின் வசிப்பிடமாக மாறிய விளாங்காடு குடிநீர் கிணறு
சித்தாமூர்:சித்தாமூர் அருகே விளாங்காடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விளாங்காடு காலனி பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வருகிறத.அதன்பின், குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த மேல்தளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்ததால், தற்போது திறந்த நிலையில் காணப்படுகிறது.இதனால், குடிநீர் கிணறு 30க்கும் மேற்பட்ட புறாக்களின் வாழ்விடமாக மாறியுள்ளது. புறாக்கள் குடிநீர் கிணற்றில் முட்டையிட்டு குஞ்சி பொறிப்பதாகவும், குடிநீரில் புறா எச்சங்கள் கலப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புறாக்களை அகற்றி விட்டு, குடிநீர் கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.