வாஸ்போ மாநில செஸ் மாணவியருக்கு அழைப்பு
வாஸ்போ' மாநில செஸ் மாணவியருக்கு அழைப்பு
'வாஸ்போ' மாநில செஸ்: மாணவியருக்கு அழைப்பு
எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'வாஸ்போ' என்ற தலைப்பில், மாநில செஸ் போட்டி வரும், 18, 19ம் தேதிகளில், நுங்கம்பாக்கத்தில் உள்ள, கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இடையிலான போட்டியில், பள்ளி அளவில், 15, 18 வயது பிரிவுகளும், கல்லுாரி பிரிவினருக்கு தனியாகவும் நடக்கிறது. போட்டியில், மாணவியர் மட்டுமே பங்கேற்க முடியும். முதல் பரிசாக, 20,000 ரூபாயும், இரண்டாம் பரிசு, 15,000, மூன்றாம் பரிசு, 10,000 வழங்கப்படுகிறது. முதல் பத்து நிலை வீராங்கனையருக்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ் தரப்படும். போட்டியில் பங்கேற்க கட்டணம் கிடையாது.பங்கேற்க விரும்பும் மாணவியர், வரும் 16ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 98407 37407, 90928 14002 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லுாரி தெரிவித்துள்ளது.