உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரத்தில் 4 நாட்களாக குடிநீர் வினியோகம் கட்

தாம்பரத்தில் 4 நாட்களாக குடிநீர் வினியோகம் கட்

அஸ்தினாபுரம்:தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், 39வது வார்டு, காமராஜபுரம், காளிதாசன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, தினசரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.இதனால், அப்பகுதிவாசிகள் பயனடைந்து வந்தனர். பின், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகிக்கப்பட்டது.தற்போது, நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால், இப்பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாதந்தோறும் குடிநீர் கட்டணம் செலுத்தியும், முறையாக தண்ணீர் வராதது குறித்து கேட்டால், மண்டல அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, இப்பகுதிக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை