செங்கையில் வாராந்திர குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ், தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை, மின் அழுத்த குறைபாடு, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 276 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது, உரிய விசாரணை செய்து, உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அதன் பின், பல்வேறு திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் லஞ்சம் வாங்கப்படுவதாக, செய்யூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கலெக்டரிடம் மனு அளித்தார்.இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, மருத்துவமனை முதல்வருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.