நெமிலிச்சேரியில் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாம்பரம்,:தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 2 மற்றும் 3ல் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குடியிருப்பு நலச்சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர், குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, 'சாலைகள் படுமோசமாக உள்ளன. மேலும், மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் திரியும் மாடுகளால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகளால் அவதிக்குள்ளாகி வருகிறோம்' என்றனர்.மேற்கண்ட பிரச்னைகளை, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தினர் சீரமைத்து தர வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.