தெருவிலுள்ள செடிகளை அகற்றுவது எப்போது?
செ ங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சியில் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மார்க்கத்தில் ரெட்டிபாளையம் ரயில் நிலையம் செல்லும் தெரு செடி, கொடி வளர்ந்து காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் சென்று வரவும் சிரமமாக உள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.ஆனந்தன், செங்கல்பட்டு.