உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வன உயிரின வார விழா 2,000 மரக்கன்றுகள் நடவு

வன உயிரின வார விழா 2,000 மரக்கன்றுகள் நடவு

திருப்போரூர்:வன உயிரின வார விழா முன்னிட்டு, திருப்போரூர் அடுத்த மடையத்தூர் ஏரி பகுதியில், வனத்துறை, சென்னை பி.என்.ஒய்., மென்பொருள் நிறுவனம், தேசிய வேளாண் நிறுவனம், நீர்வளத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. இதில், மென்பொருள் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், வனத்துறை ஊழியர்கள் உட்பட 3000 பேர் பங்கேற்று, பல வகை சார்ந்த 2,000 மரக்கன்றுகளை ஏரி மற்றும் வனப்பகுதியில் நடவு செய்தனர். அதேபோல், வனப்பகுதி மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் போன்ற குப்பை கழிவுகளையும் அகற்றினர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மண் பானை தயாரிப்புகளை மென்பொருள் ஊழியர்கள், மாணவர்கள் கண்டு ரசித்தனர். இதில், தேசிய வேளாண் நிறுவன செயலாக்க அதிகாரி முருகன், சென்னை பி.என்.ஒய்., மென்பொருள் நிறுவன தலைமை நிர்வாகிகள் வித்யா, நிஷா, வனசரக அலுவலர் பொன்செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை