உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் கழிவுநீரால் அவதி கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுமா?

மதுராந்தகத்தில் கழிவுநீரால் அவதி கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுமா?

மதுராந்தகம், மதுராந்தகத்தில், கழிவுநீர் தடையின்றி வெளியேற, கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் ஏரிக்கரையில் இருந்து, மாம்பாக்கம் ரயில்வே பாலம் வரை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், கான்கிரீட் கால்வாயாக அமைக்கப்படாததால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மதுராந்தகம் நகரில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோவில் நிலம் உள்ள பகுதியில், இந்த கழிவுநீர் கால்வாயில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. அதில் பிளாஸ்டிக் குப்பையும் குவிந்துள்ளதால், பன்றிகள் கிளறி விடும் போது, கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல, மதுராந்தகம் ஆனந்தம் நகரிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி மதில் அருகே, இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவியர் தவிக்கின்றனர். எனவே, கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில், நிரந்தர தீர்வாக, கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ