உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரி உபரி நீர் கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா?

ஏரி உபரி நீர் கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா?

மதுராந்தகம்:கருங்குழி பெரிய ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாயில் பாலத்தை விரிவுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் கருங்குழி பெரிய ஏரி 35 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.இந்த ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர் கால்வாய் வழியாகச் சென்று, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து, கல்லாற்றில் கலந்து கடலுக்கு செல்கிறது.தேசிய நெடுஞ்சாலையில், கலங்கல் நீர் செல்வதற்காக கட்டப்பட்ட சிறிய பாலப் பகுதியில், சிமென்ட் தடுப்பு கட்டைகள் சேதமடைந்து, அந்தப் பகுதியில் சாலை குறுகி உள்ளது.வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அதிகப்படியான வாகனங்கள், தென் மாவட்டங்கள் நோக்கி செல்வதால், குறுகிய பாலப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர், எரிபொருள் நிரப்பிக் கொண்டு, எதிர் திசையில் வருவதால் விபத்துகள் நடக்கின்றன.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், கால்வாய் பகுதியில் ஆய்வு செய்து, கால்வாய் பாலத்தை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை