புதிய குடிநீர் இணைப்பு பயன்பாட்டுக்கு வருமா?
தி ருப்போரூர் அடுத்த பூண்டி கிராமம், கண்ணகி தெருவில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, புதிதாக குடிநீர் இணைப்பு இரண்டு மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், இன்னும் புதிய இணைப்பு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே, இந்த புதிய குடிநீர் இணைப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். - என்.கமல், பூண்டி கிராமம்.