உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாகனங்களில் ஆபத்தான பயணம் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

வாகனங்களில் ஆபத்தான பயணம் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

செ ங்கல்பட்டு புறநகர் பகுதிகளில், செங்கல் லோடு லாரிகள், தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மீது, ஆபத்தான வகையில் கூலி தொழிலாளர்கள் அமர்ந்து செல்கின்றனர். வாகன கூரையில் பொருட்களின் மீது அமர்ந்து செல்லும் போது, சாலையின் குறுக்கே உள்ள மின்கம்பிகளில் உரசி, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, சாலையின் குறுக்கே கால்நடைகள் வருவது, மற்ற வாகனங்கள் குறுக்கே வரும் போது, 'பிரேக்' பிடித்தால், வாகனத்தில் அமர்ந்திருப்போர் சாலையில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், இதுபோன்று வாகனங்களின் கூரையில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சூரியா, சிங்கபெருமாள் கோவில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை