உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரும்பேர் கண்டிகையில் உணவுக்கூடம் அமையுமா?

பெரும்பேர் கண்டிகையில் உணவுக்கூடம் அமையுமா?

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில், மிக பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் உள்ளது.பெரும்பேர் கண்டிகை மலை மீது பழமையான, தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக்கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.எல்லையம்மன் கோவில் மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன.கோவில் உட்பிரகார மண்டபத்தில், திருமணம் நடைபெறுகிறது.ஆனால், உணவு அருந்தும் கூடம் இல்லாததால், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வருவோருக்கு, குளக்கரை பகுதி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள காலியான இடங்களில் உணவு பரிமாறப்பட்டு வருகிறது.இதனால், வெயில் மற்றும் மழைக்காலங்களில், மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, சமையல்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் அமைத்துத் தர வேண்டுமென, கோவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை