உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி

கன்டெய்னர் லாரி மோதி பெண் பலி

மணலி: கன்டெய்னர் லாரி மோதியதில், ஸ்கூட்டரில் சென்ற பெண் பலியானார். புதுவண்ணாரப்பேட்டை, ஏ.இ., கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியம்மாள், 45. இவர், தன் மகன் விமல், 22 மற்றும் உறவினர் குழந்தையுடன், நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில், பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி, எம்.எப்.எல்., சந்திப்பு - சி.பி.சி.எல்., சந்திப்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். ஸ்கூட்டரின் முன்புறம் நின்றிருந்த குழந்தை, சி.பி.சி.எல்., சந்திப்பு அருகே சென்றபோது துாங்கி விட்டது. இதனால், விமல் சாலையோரம், ஸ்கூட்டரை நிறுத்தி குழந்தையை துாக்கும்படி தாயிடம் கூறியுள்ளார். ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய மாரியம்மாள், வலதுபக்கமாக வந்து குழந்தையை துாக்க முயன்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில், மாரியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மாரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கன்டெய்னர் லாரி ஓட்டுநரான, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் குமார், 45, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி