மேலும் செய்திகள்
செங்கையில் அரசு பஸ் மோதி கல்லுாரி மாணவர் பலி
09-Jun-2025
செங்கல்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மனைவி சரளா,47.இவர், நேற்று முன்தினம் இரவு, அம்பத்துாரில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வரும் தன் கணவர் சங்கரை பார்க்க, பேருந்தில் கிளாம்பாக்கம் நோக்கி வந்தார்.வழி தெரியாமல் செங்கல்பட்டு புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இவர், ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சரளா படுகாயமடைந்தார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, சரளா சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை 2:00 மணியளவில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
09-Jun-2025