உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஸ்ரீபெரும்புதுார் : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனாராம், 37. இவரது மனைவி புதனி, 35. இருவரும், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஆரநேரி கிராமத்தில் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.நிறை மாத கர்ப்பிணியான புதனிக்கு, நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே '108' ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வலி அதிகரித்ததால், மருத்துவ உதவியாளர் மணிகண்டன் பிரசவம் பார்த்தார்.ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. பின், தாயும், குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ