உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெண்ணுக்கு கத்தரிக்கோல் குத்து முன்னாள் காதலன் வெறிச்செயல்

பெண்ணுக்கு கத்தரிக்கோல் குத்து முன்னாள் காதலன் வெறிச்செயல்

மேல்மருவத்துார், மேல்மருவத்துார் பகுதியில், காதலர்களை கத்தரிக்கோலால் குத்திய, பெண்ணின் முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர். மேல்மருவத்துார் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், 'ஆன்லைன்' விளையாட்டான,'பிரீ பையர்' மூலமாக, கடலுாரைச் சேர்ந்த சரவணன், 22, என்பவர் பழக்கமாகி உள்ளார். இந்நிலையின் சரவணன் நேற்று, காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதையறிந்து, அப்பெண்ணின் முன்னாள் காதலனான திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த எழிலரசன், 22, என்பவர், அப்பெண் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இருவரையும் பார்த்து ஆத்திரமடைந்த எழிலரசன், கத்தரிக்கோலால் சரவணன் உடலில் நான்கு இடங்களில் குத்தியுள்ளார். மேலும், காதலியையும் தாக்கி, கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற மேல்மருவத்துார் போலீசார், காயமடைந்த சரவணன் மற்றும் அப்பெண்ணை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின், எழிலரசனை கைது செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !