உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாழடைந்த கிணற்றில் பெண் சடலம் மீட்பு

பாழடைந்த கிணற்றில் பெண் சடலம் மீட்பு

மறைமலை நகர்:சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மகேந்திரா சிட்டி தீயணைப்பு துறையினர், அப்பெண் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இறந்து அழுகிய நிலையில் கிடந்த இப்பெண் யார், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை