மேலும் செய்திகள்
நகை திருடியவர் கைது
15-Aug-2025
மதுரவாயல், வீடு புகுந்து நகை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மதுரவாயல், அய்யப்பா நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சுடர்கொடி, 37. கடந்த 13ம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது, ஓராண்டாக வைத்திருந்த இடத்தில் இருந்து நகை பெட்டி இடம் மாறி இருந்தது; அதில் இருந்த 6.5 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். கடந்த 11ம் தேதி வீட்டு சாவியை, சுடர்கொடி மறந்து கதவிலேயே விட்டு சென்றது தெரிய வந்தது. இதையறிந்த போலீசார், அத்தேதிக்கான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் சாவியால் கதவை திறந்து, உள்ளே செல்வது தெரியவந்தது. விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 29, என்பதும், இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6.5 சவரன் நகை மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
15-Aug-2025