உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

திருப்போரூர்:அச்சரவாக்கத்தில், கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்தவர் கார்த்திக்,34; ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று, தன் நண்பர்கள் இரண்டு பேருடன், திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதியில் உள்ள நண்பர் பிறந்தநாள் விழாவிற்கு வந்தார். செம்பாக்கம் அருகே உள்ள வெங்கூர் மதுக்கடையில், அனைவரும் மது வாங்கி அருந்திவிட்டு, செம்பாக்கம் அருகே உள்ள அச்சரவாக்கம் விவசாய கிணற்றில் குளித்துள்ளனர்.அப்போது, நீச்சல் தெரியாமல் கார்த்திக் நீரில் மூழ்கினார்.தகவலறிந்து சென்ற திருப்போரூர் தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கிய கார்த்திக்கை சடலமாக மீட்டனர். இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ