உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

சென்னை:உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு பேரணி சென்னையில் நடந்தது.குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கடந்த 11 ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு பேரணி சென்னை ராயபுரத்தில் நடந்தது. பேரணியை சபாநாயகர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பின், மக்கள் தொகை பெருக்கம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. மாநகராட்சி பள்ளிகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளை பற்றி நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் எம்.பி., பாலகங்கா, எம்.எல்.ஏ., வெற்றிவேல், குடும்ப நலத்துறை இயக்குனர் டாக்டர் புரு÷ஷாத்தம் விஜயகுமார், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை