| ADDED : ஜூலை 31, 2024 01:04 AM
திருமங்கலம், திருமங்கலம், 12வது அவென்யூவை சேர்ந்தவர் அழகர்சாமி, 54. இவர், திருமங்கலம், 18வது அவென்யூவில், 'தி ஆர்ஞ்ச் சில்க்ஸ்' என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு வந்த ஐந்து பெண்கள், புடவைகளை வாங்குவது போல் வந்துள்ளனர். சில மணி நேரத்திற்கு பின், பிடிக்கவில்லை எனக் கூறி ஐவரும் வெளியேறினர். அவர்கள் சென்ற பின், புடவைகளை சோதித்து அடுக்கிய போது, 5,000 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்த 12 புடவைகள் திருடுபோனது தெரிந்ததது. கடையின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஐந்து பேரும் புடவைகளை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசில், நேற்று அழகர்சாமி புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, ஐந்து பெண்களை தேடி வருகின்றனர்.