உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணம் வசூலிப்பாளரிடம் ரூ.14 லட்சம் பறிமுதல்

பணம் வசூலிப்பாளரிடம் ரூ.14 லட்சம் பறிமுதல்

வியாசர்பாடி, வியாசர்பாடி, அசோக் பில்லர் அருகே, வாகன சோதனையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ஈடுபட்டனர்.அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதை ஓட்டி வந்த சவுகார்பேட்டை மோகன்லால், 40, என்பவரை விசாரித்தனர். தனியார் நிதி நிறுவனத்தில், பணம் வசூல் பிரிவில் அவர் பணிபுரிவது தெரிய வந்தது.முன் பின் முரணாக பேசியதால் அவரது பையை சோதனையிட்டதில் 14.75 லட்சம் ரூபாய் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வியாசர்பாடி போலீசார், அப்பணத்தை பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஹவாலா பணமா என மோகன்லாலிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை