உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 டூ - வீலர் தீக்கிரை

2 டூ - வீலர் தீக்கிரை

ஆவடி, ஆவடி, ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர், 28. இவர், ஆவடி புதிய ராணுவ சாலையில், சாந்தி ஆட்டோ மொபைல்ஸ்' என்ற பெயரில், இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.நேற்று மாலை 5:15 மணி அளவில், அங்கிருந்த ஊழியர்கள், 'யமஹா எப்.இசட்' பைக்கை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதன் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, தீப் பிடித்து எரிந்தது. அடுத்திருந்த 'யமஹா ரே' ஸ்கூட்டரும் தீக்கிரையானது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை