மேலும் செய்திகள்
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
16-Aug-2024
எம்.கே.பி.நகர், அம்பத்துார், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி, 36; ரவுடியாக வலம் வந்த இவர், ஆட்டோ ஓட்டுனர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 19ம் தேதி நள்ளிரவு, வியாசர்பாடி, பி.வி.காலனியில் உள்ள அவரது தோழி வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்த விசாரணையில், சம்பவத்தன்று ஆசைதம்பி வியாசர்பாடி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களை மிரட்டி, மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டதும், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அவரை தீர்த்துக்கட்டியதும் தெரியவந்தது.சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுனர்களான வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக், 35, பாலமுருகன், 26, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
16-Aug-2024