மேலும் செய்திகள்
3 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
11-Feb-2025
கொடுங்கையூர், கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தின் அருகே, நேற்று காலை, கொடுங்கையூர் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் ஐவரையும் சோதனையிட்டனர்.அதில், 100 கிராம் எடையிலான, 570 எண்ணிக்கை கொண்ட, 57 'டேப்பென்டடோல்' மாத்திரை அட்டைகள் வைத்திருந்தனர்.விசாரணையில், அவர்கள் செம்மஞ்சேரியைச் சேர்ந்த தனுஷ், 21, கார்த்திக், 24, மணிகண்டன், 30, விக்னேஷ், 20, சசிராம், 27, என்பதும், மும்பையில் இருந்து போதை மாத்திரைகள வாங்கி வந்து, இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.போதை மாத்திரைகளின் மதிப்பு, 65,000 ரூபாய் இருக்க கூடும் என, போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்கு பின், ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
11-Feb-2025