மேலும் செய்திகள்
கும்மிடிப்பூண்டி தடத்தில் நாளை 20 ரயில்கள் ரத்து
23-Feb-2025
சென்னை, கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், தாம்பரம் - பிராட்வே வழித்தடத்தில் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, புதிய ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் இன்று நடக்கின்றன. இதனால், இந்த தடத்தில் வழக்கமான மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், கோடம்பாக்கம் - தாம்பரம் மற்றும் தாம்பரம் - செங்கல்பட்டிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.எனவே, இந்த தடத்தில் பயணியர் நலன் கருத்தில் வைத்து தாம்பரம் - பிராட்வே தடத்தில் - 25, கிளாம்பாக்கம் - பிராட்வே - 20, பல்லாவரம் - செங்கல்பட்டு - 5 என, 50 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.பயணியரின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதான பேருந்து நிலையங்களில், அலுவலர்களை நியமித்து பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
23-Feb-2025