உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 53 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

53 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அம்பத்துார், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.பாடியநல்லுாரில் உள்ள கிடங்கு அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் லாரியில் அரிசி ஏற்றி கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள், செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜி, 40, ராஜேஷ், 24, சதீஷ், 29, அப்துல் ரகுமான், 47, மற்றும் துரை பாண்டியன், 19, என்பதும், ரேஷன் அரிசி வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 53,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை