உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஞ்சல் துறை சார்பில் தேர்வு மாணவர்களுக்கு ரூ.6,000

அஞ்சல் துறை சார்பில் தேர்வு மாணவர்களுக்கு ரூ.6,000

சென்னை, அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மாதம் 500 ரூபாய் வீதம், ஆண்டிற்கு 6,000 ரூபாயை, மத்திய அரசு வழங்குகிறது.இந்தியா முழுதும் தேர்வு செய்யும் 920 பேரில் தமிழகத்தில் 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த உதவித்தொகையை பெற விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான தேர்வுகள், இரண்டு நிலைகளாக நடத்தப்படும். முதல் தேர்வு பொது அறிவு சார்ந்தும், இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 'புராஜக்ட்' வழங்கப்படும். இதில் மாணவர்களை தேர்வு செய்து உதவித்தொகை வழங்கப்படும்.விண்ணப்பங்களை www.tamilnadupost.cept.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். விண்ணப்பங்கள், செப்., 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகவலுக்கு 044 - 2854 3199 என்ற தொலைபேசி எண்ணிலும், indiapost.gov.inஎன்ற இ - மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம் என, அஞ்சல் துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ