உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டெங்கு கொசு உற்பத்தி ரூ.75,000 அபராதம்

டெங்கு கொசு உற்பத்தி ரூ.75,000 அபராதம்

அடையாறு, அடையாறு மண்டலம், 171வது வார்டு, ஆர்.ஏ.புரம், திருவேங்கடம் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. பணி தளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில், டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தது. பலமுறை எச்சரிக்கை செய்தும், சுகாதாரமாக வைக்காத கட்டுமான நிறுவனத்திற்கு, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.அதேபோல், டெங்கு பரப்பும் வகையில் இருந்ததாக, அதே பகுதி ஒரு கெமிக்கல் நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும், அடையாறு, கோவிந்தராஜபுரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு, 25,000 ரூபாயும் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி