போர்க் லிப்ட் வாகனம் மோதி 8 மாத பெண் குழந்தை பலி
மப்பேடு,கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து, 25. இவரது மனைவி பிரியாராணி, 22, மற்றும் புவனேஸ்வரி என்ற எட்டு மாத பெண் குழந்தையுடன், மப்பேடு அடுத்த ஏலம்பாக்கம் செங்கல்சூளையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம், வேலை செய்யும் இடம் அருகே, சாக்குப்பை விரித்து குழந்தையை படுக்க வைத்திருந்தனர்.அப்போது, செங்கற்களை அடுக்கும் போர்க்லிப்ட் வாகனம், குழந்தையின் மீது ஏறி இறங்கியதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, பிரியாராணி அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், போர்க்லிப்ட் வாகனத்தை ஓட்டிய திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டைச் சேர்ந்த ரவி, 26, என்பவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.